வெந்தயக்கீரை பருப்பு கூட்டு/Vendhaya keerai kootu/ Fenugreek leaves kootu/ Methi kootu/ Spinach kootu/Spinach gravy

தேவையான பொருட்கள்:

வெந்தயக்கீரை- 1 கட்டு

துவரம் பருப்பு - 1/4 கப் (வேகவைத்து )

வெங்காயம் - 10 (நறுக்கியது)

 மிளகாய் - 3

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 டீஸ்பூன்

தண்ணீர் - 2 கப்

தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்

 உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

 கடுகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

அரைப்பதற்கு....

சீரகம் - 1 டீஸ்பூன்

தேங்காய் - சிறிது

பூண்டு-2

வெங்காயம்-3

பச்சைமிளகாய்-2

 கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது



செய்முறை:
கீரையை  பொடியாக நறுக்கி நன்கு கழிவி கொள்ளவும்.
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வரமிளகாய்,  வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். கீரையானது நன்கு வெந்ததும், அதில் வேகவைத்து துவரம்பருப்பை சேர்த்து, அத்துடன்  தண்ணீர் ஊற்றி கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நன்கு வெந்தவுடன், பருப்பு மத்தை கொண்டு மசிக்க வேண்டும். பின் அதனுடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள  பொருட்களை தேங்காய் உடன் சேர்த்து  அரைத்து போட்டு மிக்ஸ்  பண்ணவும். பின் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், வெந்தயக்கீரை பருப்பு கூட்டு தயார் .....



Comments