வாழைக்காய் கடலை பருப்பு கூட்டு/Vazhakkai Kadalaiparuppu Kootu/ Vazhakkai kootu/ Raw banana kootu/Raw banana Curry/Chettinadu Vazhakkai Kadalaiparuppu Kootu

தேவையான பொருட்கள்:
வாழைக்காய்   - 1 கப்
கடலை பருப்பு  - 1/4 கப்
வெங்காயம் - 10 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
தக்காளி -1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
தேங்காய் - சிறிது
தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்
 உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
 கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
 கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது

செய்முறை:
முதலில் வாழைக்காய் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு   வேகவைத்து எடுத்து கொள்ளவும்.   ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம்   மற்றும் மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் தக்காளியை  சேர்த்து கிண்டவும். பின்னர் அதில் ஊற வைத்த கடலைப்பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி கிளறி நன்கு வேகவைக்கவும். பின்  அதில்  வேகவைத்துள்ள வாழைக்காய் சேர்த்து  நன்கு பிரட்டி விட வேண்டும். அத்துடன்  மஞ்சள் தூள்  தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கிளற  வைக்க வேண்டும்.  பின் அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், வாழைக்காய்  கடலை பருப்பு  கூட்டு தயார் .....

Comments

Post a Comment