பொண்ணாங்கண்ணி கீரை முட்டை பொரியல் / Red Ponnanganni keerai Muttai Poriyal / Dwarf Copperleaf or Alternanthera sessilis Egg Stir Fry /Chettinad Egg Scramble with Dwarf Copperleaf/Alternanthera sessilis Egg Podimas


தேவையான பொருட்கள்:

பொண்ணாங்கண்ணி கீரை - 2 கப்

முட்டை -3

பெப்பர் - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

சிவப்பு மிளகாய் - 4

உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை  - சிறிது


செய்முறை:


ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் சீரகம்  சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் கட்பண்ணி  வைத்துள்ள பொண்ணாங்கண்ணி கீரை  சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு வதக்க வேண்டும். பொண்ணாங்கண்ணி கீரை நன்கு வெந்தவுடன் முட்டையை உடைத்து ஊற்றி மிதமான சூட்டில் நன்கு வதக்க வேண்டும். பின் அதனுடன் சிறிது பெப்பர் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், பொண்ணாங்கண்ணி கீரை முட்டை பொரியல் தயார் .....




Comments