வாழைத்தண்டு பொரியல்/Vazhaithandu Poriyal/ Banana Stem Poriyal/ Banana Stem Stir Fry/ Banana Stem Curry
தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு - 3 கப் (நறுக்கியது)
வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
மிளகாய்-5
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - சிறிது
தாளிப்பதற்கு...
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கொத்தமல்லி
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வாழைத்தண்டு, மஞ்சள் தூள் சிறிது உப்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரில் உள்ள நீரை வைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் வேக வைத்துள்ள வாழைத்தண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி, மற்றும் கொத்தமல்லி சேர்த்து மிதமான தீயில் வதக்கி இறக்கினால், வாழைத்தண்டு பொரியல் தயார் .....

Comments
Post a Comment