வாழைப்பூ மசால் வடை/ Vazhaipoo Masal Vadai/Banana Flower Masal Vada/ Vazhaipoo Vadai/ Bannana blossom vadai

தேவையானப்பொருட்கள்:
வாழைப்பூ - 1
கடலைப்பருப்பு - 1 கப்
பச்சை மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சோம்பு - 1 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்றவாறு
எண்ணெய்  - பொறிப்பதற்கு

செய்முறை:

கடலைப்பருப்பை, மூன்று to நான்கு  மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.  வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  வாழைப்பூவை நறுக்கித் தண்ணீரில் போட்டு வைக்கவும்.
ஊறவைத்துள்ள பருப்பை, நீரை வடித்துவிட்டு, அத்துடன் மிளகாய், இஞ்சி,  மற்றும் உப்பு போட்டு தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் வாழைப்பூ,  சோம்பு, பெருங்காயம்,  நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெயைக் காய வைக்கவும். காய்ந்ததும் சிறு தீயில் வைத்துக் கொள்ளவும். மாவில் ஒரு சிறு உருண்டை எடுத்துக் கொண்டு
உள்ளங்கையில் வைத்து லேசாக அழுத்தி எண்ணெயில் போடவும்; இதுபோல் 4 அல்லது 5 போட்டுக் கொண்டு சிறு தீயில் வேக விடவும். இதேபோல் எல்லாவற்றையும் போட்டு எடுக்கவும். சுடச் சுட வாழைப்பூ மசால் வடை தயார் ....


Comments