வாழைப்பூ பருப்பு கூட்டு/Vazhaipoo Kootu/ Plantain Flower Kootu/Banana Flower Kootu

தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 1
துவரம் பருப்பு - 1/4 கப் (வேகவைத்து )
வெங்காயம் - 10 (நறுக்கியது)
 மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
தேங்காய் - சிறிது
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
 கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது

செய்முறை:
வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி உப்பு போட்ட நீரில் போட்டு வைக்கவும்.
 ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வாழைப்பூவை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். சிறிது மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர்  வேக வைக்கவேண்டும் . வாழைப்பூ நன்கு வெந்ததும், அதில் வேகவைத்து துவரம்பருப்பை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.  பின் அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், சுவையான வாழைப்பூ  பருப்பு கூட்டு தயார் .....

Comments