தேங்காய் சட்னி/ Thengai chutney/ Coconut chutney

தேவையான பொருட்கள்:
தேங்காய் - 1 மூடி (1/2 தேங்காய்)
பச்சைமிளகாய் - 3
வரமிளகாய்-2
இஞ்சி - அரை விரல் நீளம்
பொட்டுக்கடலை -சிறிது
பூண்டு-3
கறிவேப்பிலை -சிறிது
உப்பு -தேவையானளவு
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு -1/4 ஸ்பூன்
எண்ணெய் - தேவைகேற்ப
தண்ணீர்

செய்முறை:
தேங்காய், மிளகாய், இஞ்சி, பொட்டுக்கடலை, பூண்டு, கறிவேப்பிலை, உப்பு மற்றும்  தண்ணீர் சேர்த்து  கொரகொரப்பாக அரைக்கவும். அடுப்பில் மிதமான சூடுடன் வாணலியில் எண்ணையை விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பில்லை, போட்டு தாளித்து அதை  மேலே அரைத்துள்ள கலவையில் கொட்டி இறக்கினால் தேங்காய் சட்னி தயார் .....

Comments