தட்டாம்பயறு மசால் குழம்பு / Thatta Payaru Kulambu/ Thattam Payaru Kara Kuzhambu/Karamani Curry

தேவையான பொருட்கள்:

தட்டாம்பயறு   - 2 கப் 

வெங்காயம் - 10 (நறுக்கியது)

பூண்டு- 10

பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)

தக்காளி -2 (நறுக்கியது)

துருவிய தேங்காய் -சிறிது

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்

சாம்பார் தூள் -3 டீஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்

 உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

 கடுகு - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

சோம்பு -1/2 டீஸ்பூன்

 கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது

செய்முறை:

தட்டாம் பயறுவை இரவே ஊறவைத்து காலை‌யி‌ல் த‌ண்‌‌ணீரை வடி‌த்து எடு‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

ஒரு  வாணலில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சீரகம் மற்றும் கறிவேப்பிலை  போட்டு வதக்கவும்.  பின் வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி, துருவிய தேங்காய்  மற்றும் சிறிது கொத்தமல்லி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக  போட்டு நன்கு வதக்கி மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

கு‌க்கரை அடு‌ப்‌பி‌ல் வை‌த்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் தாளிக்க  கொடுத்துள்ள பொருட்களை
 சேர்த்து தாளித்து பின் அதி ஊற வைத்துள்ள தட்டாம் பயறுவை  சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில்  அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு கிளறவும்.  பிறகு அதில் மஞ்சள் தூள்  மற்றும் சாம்பார் தூள் சேர்த்து  நன்கு வதக்க வேண்டும். பின்  தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க  வைக்க வேண்டும்.  பிறகு கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், தட்டாம்பயறு மசால் குழம்பு / கூட்டு  தயார்.


கு‌க்க‌‌‌ரி‌ல் இ‌ல்லாம‌ல் பா‌த்‌திர‌த்‌திலு‌ம் செ‌ய்யலா‌ம். ஆனா‌ல் அத‌ற்கு தட்டாம் பயறுவை மு‌ன்னரே வேக வை‌த்து எடு‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். ம‌ற்றவைகளை ‌அ‌ப்படியே செ‌ய்யலா‌ம்.





Comments