சிவப்பு தண்டுக்கீரை பொரியல்/ Red Thandu Keerai Poriyal/ Red Thandu Keerai Poriyal/ Amaranth Leaves stir fry

தேவையான பொருட்கள்:

சிவப்பு தண்டுக்கீரை  - 2 கப்

வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)

சிவப்பு மிளகாய் - 4

உப்பு - தேவையான அளவு

துருவிய தேங்காய்

தாளிப்பதற்கு...

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு-1/2 டீஸ்பூன்

உளுந்தம்பருப்பு -1/4 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி   - சிறிது


செய்முறை:


ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம்  சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் கட்பண்ணி  வைத்துள்ள சிவப்பு தண்டுக்கீரை  சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர்  சேர்த்து  நன்கு வதக்க வேண்டும். கீரை நன்கு வெந்தவுடன்  அதனுடன் சிறிது துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், சிவப்பு தண்டுக்கீரை பொரியல் தயார் .....



Comments