பொண்ணாங்கண்ணி கீரை பருப்பு கூட்டு/Red Ponnanganni keerai Paasi Paruppu Kootu/ Dwarf Copperleaf or Alternanthera sessilis Moong Dal / Copperleaf Kootu/ Copperleaf Curry
தேவையான பொருட்கள்:
பொண்ணாங்கண்ணி கீரை - 1 கப்
பாசிப் பருப்பு - 1/4 கப்
வெங்காயம் - 10 (நறுக்கியது)
மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
தண்ணீர்
தேங்காய் - சிறிது
தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் கட்பண்ணி வைத்துள்ள பொண்ணாங்கண்ணி கீரை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். அதில் பாசிப்பருப்பை சேர்த்து, தண்ணீர் ஊற்றி கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். வெந்தவுடன் அத மசிக்க வேண்டும். பின் அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், பொண்ணாங்கண்ணி கீரை பருப்பு கூட்டு தயார் .....
Comments
Post a Comment