புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு/Pudalangai kadalai paruppu Kootu/ Snake Gourd Kootu/ Snake Gourd Chana dal Stir Fry
தேவையான பொருட்கள்:
புடலங்காய் - 1 கப்
கடலை பருப்பு - 1/4 கப் (வேகவைத்து கொள்ளவும்)
வெங்காயம் - 10 (நறுக்கியது)
மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
தேங்காய் - சிறிது
தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் கடலைப்பருப்பை வேகவைத்து எடுத்து கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் புடலங்காய் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். அத்துடன் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு வேக வைக்க வேண்டும். நன்கு வெந்தவுடன் வேகவைத்த கடலைப்பருப்பை போட்டு கிளறவும். பின் அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், புடலங்காய் கடலை பருப்பு கூட்டு தயார் .....

Comments
Post a Comment