பீர்க்கங்காய் சுண்டல் பொரியல் / Peerkangai Sundal Poriyal / Ridge gourd Chana Poriyal / Ridge gourd Chana/ Ridge gourd Curry

தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய்  - 1 கப்
சுண்டல் -1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
வர மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
தேங்காய் - சிறிது
தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்
 உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
 கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
 கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது

செய்முறை:
முதலில் குக்கரில் சுண்டலை சிறிது உப்பு, தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் போட்டு வேகவைத்து தனியே எடுத்துக்கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் வர  மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் கட்பண்ணி  வைத்துள்ள பீர்க்கங்காய் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். அத்துடன்  தேவையானளவு உப்பு மற்றும்  மஞ்சள் தூள்  சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.  தண்ணீர் விடாமல் மூடி வைத்து  நன்கு  வேகவைக்க வேண்டும். நன்கு வெந்தவுடன் வேகவைத்த சுண்டலை போட்டு நன்கு கிளற வேண்டும்.  நன்கு மிஃஸ் பண்ணியபிறகு அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், பீர்க்கங்காய்  சுண்டல் பொரியல் தயார் .....


Comments