தேவையான பொருட்கள்:
பசலை கீரை- 1 கட்டு
துவரம் பருப்பு - 1/4 கப் (வேகவைத்து )
வெங்காயம் - 10 (நறுக்கியது)
மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
தேங்காய் - சிறிது
தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
கீரையை பொடியாக நறுக்கி நன்கு கழிவி கொள்ளவும்.
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். கீரையானது நன்கு வெந்ததும், அதில் வேகவைத்து துவரம்பருப்பை சேர்த்து, அத்துடன் தண்ணீர் ஊற்றி கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நன்கு வெந்தவுடன், பருப்பு மத்தை கொண்டு மசிக்க வேண்டும். பின் அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், பசலை கீரை பருப்பு கூட்டு தயார் .....
Pasalai Keerai Benefits in Tamil
ReplyDelete