பருப்பு ரசம்/Paruppu Rasam/dal rasam

தேவையான பொருட்கள்:
குழைய வேக வைத்த துவரம் பருப்பு - அரை கப்
புளி - 1 சிறு உருண்டை
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மிளகு - அரை டீஸ்பூன்
பூண்டு -7 பல்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - தேவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு  - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது

செய்முறை:
புளியை 2 டம்ளர் கழனி தண்ணீரில் நன்கு கரைத்து வடிகட்டவும்.
ஒரு மிக்சி ஜாரில் சீரகம், மிளகு, பூண்டு, தக்காளி, பச்சை  மிளகாய், கறிவேப்பில்லை, கொத்தமல்லி மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.   பின் ஒரு வாணலி  வைத்து நல்லெண்ணெய்  ஊற்றி சூடானதும் தாளிப்பதற்கு  கொடுத்துள்ள  பொருட்களை  போட்டு தாளித்து  அரைத்த மசாலாவை போட்டு நன்கு வதக்க வேண்டும். பின் சிறிது மஞ்சள் தூள், புளித் தண்ணீர்,  குழைந்த துவரம் பருப்பு, உப்பு மற்றும் தண்ணீர்  சேர்க்கவும். ரசம் நுரைகட்டி வரும் போது, கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் பருப்பு ரசம் தயார் ...

Comments