தேவையான பொருட்கள்:
முட்டை -4
மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
பெப்பர் - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி-1
சிவப்பு மிளகாய் - 4
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு- 1/2 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு-1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் மற்றும் கறிவேப்பில்லை போட்டு பொரிந்ததும் வெங்காயம், மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அத்துடன் சிறிதளவு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு முட்டையை உடைத்து ஊற்றி மிதமான சூட்டில் நன்கு வதக்க வேண்டும். பின் அதனுடன் சிறிது பெப்பர் போட்டு கிளறி இறக்கினால், முட்டைபொடிமாஸ் தயார் .....
Comments
Post a Comment