குதிரைவாலி உப்புமா/Kuthiraivali upma/ Barnyard millet upma/ Millet upma

தேவையான பொருட்கள்:
குதிரைவாலி  - 1 கப்
கேரட்-1
வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிது
துருவிய தேங்காய் - சிறிது
கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது
எண்ணை - 4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு -  தேவைக்கேற்றவாறு


செய்முறை:

ஒரு குக்கரில்  எண்ணையை விட்டு சூடானதும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கிள்ளிய மிளகாய் ஆகியவற்றைப்போட்டு, பருப்புகள் சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய கேரட் போட்டு நன்கு வதக்கவும். பின் குதிரைவாலி மற்றும் 2 கப் தண்ணீரும், சிறிது துருவிய தேங்காய், கொத்தமல்லி  மற்றும்  உப்பும் சேர்த்துக் கலக்கி கொதிக்க விடவும்.  கொதிக்க ஆரம்பித்ததும் மூடி வைத்து வேக விடவும். பின் 2 விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். குதிரைவாலி உப்புமா தாயர் ...

Comments