கத்தரிக்காய் முருங்கைகாய் சாம்பார்/ Kathirikai Murungakai Sambar / Brinjal Drumstick Sambar/ Kathirikai Murungakai Kuzhambu/ Brinjal Curry

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் -5

முருங்கைகாய்- 2

உருளைக்கிழங்கு -2

துவரம் பருப்பு -1/2 கப்

வெங்காயம்-15

தக்காளி-1

பச்சை மிளகாய்-3

புளி தண்ணீர் -சிறிது அல்லது மாங்காய்(சிறந்தது)

மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்

சாம்பார் தூள்-3 டீஸ்பூன்

பெருங்காயம் தூள்-1/2 டீஸ்பூன்

துருவிய தேங்காய் -சிறிது

தாளிப்பதற்கு......

நல்லெண்ணெய் -2 டீஸ்பூன்

கடுகு- 1/2 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு-1/4 ஸ்பூன்

சோம்பு-1/2 ஸ்பூன்

நறுக்கிய வெங்காயம்-4

கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி


செய்முறை:


ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து முக்கால் பதத்திர்கு வேகவைத்துவும்.  பிறகு அதே பாத்திரத்தில் கத்திரிக்காய், முருங்கக்காய், உருளைக்கிழங்கு,  வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும். பின்னர் சிறிது மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் புளி தண்ணீர்  சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.  பின் ஒரு வாணலியை வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அதை அந்த பாத்திரத்தில் போடவும். இத்துடன் சிறிது பெருங்காயம் தூள் சேர்க்கவும். 10-15 நிமிடம் கழித்து துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால் சுவையான கத்திரிக்காய் முருங்கைகாய் சாம்பார் தயார் .......



Comments