சர்க்கரை அல்லது இனிப்பு பொங்கல்/ இனிப்பு பொங்கல்/ கோவில் சர்க்கரை பொங்கல்/ Inippu Pongal/ Sweet pongal/| Chakkara pongal/ Sakkarai pongal
தேவையான பொருட்கள்:
பச்சரிசி- 1 கப்
பாசி பருப்பு -1/2 கப்
வெல்லம் or கருப்பட்டி - 2 கப்
முந்திரி -25 கிராம்
உலர் திராட்சை- 10
நெய்- 3 ஸ்பூன்
சுக்கு - சிறிது
ஏலக்காய் - 10
தேங்காய் - 1
தண்ணீர் -5 கப்
உப்பு -சிறிது
செய்முறை:
அரிசி மற்றும் பாசிப்பருப்பை தண்ணீர் விட்டு 30 நிமிடம் ஊறவைத்து நன்கு கழுவி தண்ணீரை வடித்துக்கொள்ளவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் மற்றும் சிறிது நெய் சேர்த்து காய்ச்ச்சி கொள்ளவும். ஏலக்காய், சுக்கு இரண்டையும் மிக்சியில் பவுடராக அரைத்து கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். தேங்காயை நன்கு துருவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அல்லது குக்கரில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். கொதிக்கும் போது அரிசி மற்றும் பாசிப்பருப்பை, சிறிது உப்பு (not more) போட்டு நன்கு வேக விடவும். அரிசியும், பருப்பும் நன்கு வெந்ததும் அதில் காய்ச்சிய வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். நன்கு கிளறிய பின்பு வறுத்த முந்திரி, துருவிய தேங்காய் இரண்டையும் சேர்த்து நன்கு கிளறவும். அதன் பிறகு ஏலக்காய், சுக்கு பவுடரையும் சேர்த்து நன்கு கிளறவும். அடுப்பில் இருந்து இறக்கும் போது நெய் ஊற்றி நன்கு கிளறி இறக்கவும். சுவையான சர்க்கரை அல்லது இனிப்பு பொங்கல் தயார்.
Comments
Post a Comment