தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
பாசுமதி அரிசி - 2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 டீஸ்பூன்
வெங்காயம் - 3 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4
புதினா - தேவையானளவு
கொத்தமல்லி - தேவையானளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா-1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1/4 கப்
தேங்காய் பால் - 1 கப்
வறுத்த முந்திரி -10
தண்ணீர் - 2 கப்
தாளிப்பதற்கு ......
பட்டை - 2 இன்ச்
ஏலக்காய் - 3
கிராம்பு - 6
பிரியாணி இலை - 2
எண்ணெய் - 5-6 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடித்து, அதில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு பாசுமதி அரிசியை கழுவி, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளிக்கவும். பின் வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, அதில் புதினா, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும் . பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு சிக்கனின் நிறம் மாறும் வரை வதக்கி விட வேண்டும். அடுத்து அதில் தக்காளி, தயிர், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பிரட்டி விட வேண்டும்.
பின் தீயை குறைத்து, 10 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும். பிறகு, அதில் அரிசியை சேர்த்து, தேங்காய் பால், தண்ணீர், உப்பு, லெமன் சாறு மற்றும் நெய் சேர்த்து , தீயை குறைத்து, குக்கரை மூடி, 3 விசில் வைக்கவும். 10 நிமிடம் கழித்து இறக்கி, கொத்தமல்லி மற்றும் முந்திரியைத் தூவினால், சிக்கன் பிரியாணி ரெடி!!!
இணையாக தயிர்-வெங்கயா பச்சடியை சேர்த்துக் கொள்ளலாம்.

Comments
Post a Comment