குடைமிளகாய் வேர்க்கடலை மசாலா / Bell pepper Peanut Masala Side dish for Chapathi / Capsicum Peanut Masala Side dish for Roti / Capsicum Peanut Curry/Capsicum Peanut Gravy

தேவையான பொருட்கள்:

குடைமிளகாய் - 2 கப்  (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -சிறிது
உப்பு  -தேவையானளவு
தண்ணீர் -தேவையானளவு
அரைப்பத்திற்க்கு.......
எண்ணெய் -1டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வரமிளகாய் - 4
வெங்காயம் -1 (பொடியாக நறுக்கியது)
துருவிய தேங்காய்- சிறிது 
புளி -சிறிய நெல்லிக்காய் அளவு
வறுத்த வேர்க்கடலை - 1 கையளவு
கொத்தமல்லி மற்றும் உப்பு - தேவையான அளவு

செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் மற்றும்  குடைமிளகாய் தவிர, அரைக்க கொடுத்துள்ள  அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுத்து இறக்கி, குளிர வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும். பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,  சீரகம் மற்றும் குடைமிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இத்துடன் சிறிது மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல்  மூடி போட்டு வதக்க வேண்டும். குடைமிளகாயானது நன்கு வெந்ததும், அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலைவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.  பிறகு கொத்தமல்லி தூவி  இறக்கினால் சுவையான குடைமிளகாய் வேர்க்கடலை  மசாலா தயார் ....



Comments