தட்டாம் பயிறு புளிகுழம்பு/Thattam/Thatta Payaru PuliKuzhambu/Thattam Payaru Kara Kuzhambu/Karamani Curry
தேவையானப் பொருட்கள்:
தட்டாம்பயிறு -2 கப்
வெங்காயம் - 10
தக்காளி - 1
பூண்டு -10
பச்சை மிளகாய் - 3
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் -2 ஸ்பூன்
கரம்மசாலா -1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு -1/4 ஸ்பூன்
உளுந்து -1/4 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
புளி- 1/4 கப்
உப்பு
அரைப்பதற்கு:
தேங்காய்- 1/2 கப்
சீரகம் -1/4 ஸ்பூன்
பூண்டு -3
பச்சை மிளகாய் -2
கறிவேப்பிலை, கொத்துமல்லி
செய்முறை:
தட்டாம் பயறுவை இரவே ஊறவைத்து காலையில் தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
குக்கரை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து, வெந்தயம் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின்னர் தக்காளியைப் போடவும். தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள், தனியா தூள், கரம்மசாலா, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை போடவும். ஊறிய தட்டாம் பயறுவை போட்டு ஒரு கிளறு கிளறி புளிகரைசல் மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வையுங்கள். பிறகு அரைத்த தேங்காய் மசாலாவை போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கினால் தட்டாம் பயிறு புளிகுழம்பு தயார்.
குக்கரில் இல்லாமல் பாத்திரத்திலும் செய்யலாம். ஆனால் அதற்கு தட்டாம் பயறுவை முன்னரே வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றவைகளை அப்படியே செய்யலாம்.
Comments
Post a Comment