தக்காளி சாதம்/ Thakkali Sadam/Tomato Rice




தேவையான பொருட்கள்:
அரிசி -1 கப்
தக்காளி -4 (நறுக்கியது)
வெங்காயம் -10 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பட்டை மற்றும் பிரிஞ்சி இல்லை - 2
இலவங்கம் - 3
சோம்பு - சிறிதளவு
நெய் - 1 டீஸ் ஸ்பூன் 
நல்லெண்ணை - 2 டீஸ் ஸ்பூன் 
மஞ்சள் தூள் -1 டீஸ் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு 
கொத்தமல்லி   மற்றும் கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, பிரிஞ்சி இலை, இலவங்கம் சோம்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு  வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய்  மற்றும் தக்காளி  ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.   இத்துடன் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பின் கழுவிய அரிசியை போட்டு வதக்கி அத்துடன் தண்ணீர் சேர்க்கவும். பிறகு நெய் ஊற்றி குக்கரை முடி மூன்று விசில் வந்தவுடன் கேஸை ஆப் செய்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Comments