தேவையான பொருட்கள்:
சேமியா
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். தக்காளியானது நன்கு மென்மையாக வதங்கியதும், அதில் இடியாப்பத்தை போட்டு நன்கு பிரட்டி, பின் அதில் நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், தக்காளி இடியாப்பம் ரெடி!
Comments
Post a Comment