ரவா லட்டு/ Rava laddu/ Rava Ladoo

தேவையான பொருட்கள்:

ரவை - ஒரு கப் (150 கி)
சர்க்கரை - அரை கப் (75 கி)
துருவிய தேங்காய் - அரை கப்
முந்திரி - 7
உலர்ந்த திராட்சை - சிறிது
ஏலக்காய் - 1
நெய் - தேவைக்கு ஏற்ப
பால் - தேவைக்கு ஏற்ப

செய்முறை :

ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி, உலர்ந்த திராட்சை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே கடாயில் ரவையை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின்னர், அதே கடாயில் துருவிய தேங்காயை ஈரம் இல்லாமல் வறுத்துக் கொள்ளவும். பிறகு துருவிய தேங்காயுடன், வறுத்து வைத்துள்ள ரவை, முந்திரி, திராட்சை மற்றும் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரையுடன் ஏலக்காயை பொடி செய்து சேர்த்து  ஒன்றாக கலக்கவும். பிறகு அந்த கலவையில் சிறிதளவு பால் சேர்த்து கொள்ளவும். பிறகு கலவையை வேறொரு தட்டுக்கு மாற்றி இளஞ்சூட்டிலேயே சிறு, சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். சுவையான ரவா லட்டு தயார்.




பாலைச் சிறிது சிறிதாகத் தெளித்தே மாவை உருண்டை பிடிக்க வேண்டும். அதிகம் பால் விட்டால் கொழகொழத்து உருண்டை பிடிக்க வராது. ரவையை நன்கு சிவக்க வறுக்க வேண்டும். இல்லையென்றால் பச்சை வாடை அடித்து சுவையைக் கெடுத்து விடும்.

Comments