தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் - 1 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு- 5
சிவப்பு மிளகாய் - 4
துருவிய தேங்காய் -சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை, மிளகாய், வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் அதில் கட்பண்ணி வைத்துள்ள பீர்க்கங்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். பீர்க்கங்காய் நன்கு வெந்தவுடன் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி மிதமான சூட்டில் நன்கு வதக்க வேண்டும். பின்னர் மிக்சியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கவும். சுவையான பீர்க்கங்காய் சட்னி தயார் .....
Comments
Post a Comment