பட்டாணி மசாலா / Pattani Masala/ Green Peas Masala/ Green Peas Masala Curry - Side Dish for Chapathi

தேவையான பொருட்கள்:

 பட்டாணி    - 1 கப் (ஊறவைத்து கொள்ளவும்)

வெங்காயம் - 10 (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 3(நீளமாக கீறியது)

தக்காளி -1 (நறுக்கியது)

பூண்டு -5 பல்

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்

சாம்பார் தூள் -2 டீஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

 எண்ணெய் - 2 டீஸ்பூன்

 உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

 கடுகு - 1 டீஸ்பூன்

சோம்பு  - 1 டீஸ்பூன்

துருவிய தேங்காய் -சிறிது

கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது


செய்முறை:
குக்கரில் எண்ணெய் ஊற்றி  கடுகு, உளுத்தம் பருப்பு,  சோம்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம்,  பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும். பிறகு ஊற வைத்த  பட்டாணி போட்டு மிஃஸ் பண்ணவும்.  இத்துடன் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சாம்பார்  தூள் சேர்த்து வதக்கவும். பின் அத்துடன் தண்ணீர் சேர்த்து  குக்கரை முடி மூன்று விசில் வந்தவுடன் கேஸை ஆப் செய்து சிறிதளவு துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி தூவி  கிளறி இறக்கினால், பட்டாணி  மசாலா தயார் ....


Comments