தேவையான பொருட்கள்
நெய்மீன் கருவாடு
பச்சைமிளகாய் -2
பெரியவெங்காயம் -4
தக்காளி -1
மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
பெப்பர் தூள் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை
உப்பு
நல்லெண்னை -2 டீஸ்பூன்
செய்முறை
ஒரு
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி
முதலில் கருவாடை
நன்கு பொரித்து எடுத்து கொள்ளவும். பிறகு அதே எண்ணெயில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். நன்கு வதக்கிய பிறகு கறிவேப்பிலை, பச்சைமிளகாய் மற்றும் நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும். இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பிறகு மிளகாய் தூள் மற்றும் பெப்பர் தூள் போட்டு கிளரி விடவும். 5 நிமிடம் கழித்து வறுத்து
வைத்துள்ள
கருவாடு துண்டுகளை
போட்டு கிளரி இறக்கினால் சுவையான நெய்மீன் கருவாடு தொக்கு / ப்ரை தயார் ....
Comments
Post a Comment