முட்டை பொரியல் /Muttai Poriyal /Egg Stir Fry /Chettinad Egg Scramble /Egg Podimas

தேவையான பொருட்கள்:
முட்டை -4
பெப்பர் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
சிவப்பு மிளகாய் - 4
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து  நன்கு வதக்க வேண்டும். பிறகு முட்டையை உடைத்து ஊற்றி மிதமான சூட்டில் நன்கு வதக்க வேண்டும். பின் அதனுடன் சிறிது பெப்பர் மற்றும் சீரகம் போட்டு கிளறி இறக்கினால், முட்டை பொரியல் தயார் .....






 

Comments