தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி -3 கப்
பச்சரிசி -1/4 கப்
உளுந்து -1 கப்
வெந்தயம் -1/2 டீஸ்பூன்
உப்பு -தேவையானளவு
தண்ணீர் - -தேவையானளவு
செய்முறை:
பாத்திரத்தில் தண்ணீர் போட்டு இட்லி அரிசி மற்றும் பச்சரிசி போட்டு 4 மணி நேரம் ஊற வைக்கவும். அதேபோல் மற்றொரு பாத்திரத்தில் உளுந்து மற்றும் வெந்தயம் போட்டு 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
நன்கு ஊறிய பிறகு தனித்தனியாக தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும். பிறகு இரண்டையும் ஒன்றாக கலந்து உப்பு போட்டு புளிக்க வைக்கவும். 5 மணி நேரம் கழித்து இட்லி தட்டில் ஊற்றி அவித்து எடுத்தால் மிருதுவான இட்லி தயார்...
Comments
Post a Comment