வெண்டைக்காய் பருப்பு கூட்டு/Ladies finger paruppu kootu/ Ladies finger Toor Lentil/Ladies finger Poriyal / Ladies finger Toor Lentill Stir Fry/Ladies finger Kootu/Ladies finger sabzi
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 2 கப் (பொடியாக நறுக்கியது)
துவரம் பருப்பு - 1/4 கப் (வேகவைத்துது)
வெங்காயம் - 10 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
தக்காளி -2 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெண்டைக்காய் நன்கு வதக்கி தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு மற்றோரு வாணலில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் தக்காளியை போட்டு நன்கு வதக்கவும். பிறகு வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். அதில் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு வேகவைத்த துவரம்பருப்பை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, 5-10 நிமிடம் நன்கு கிளற வேண்டும். கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், வெண்டைக்காய் பருப்பு கூட்டு ரெடி.....
Comments
Post a Comment