வெண்டைக்காய் மசால் பஃரை / Ladies finger Masal fry/ Bendakaya fry/ Bhindi Masal fry/ Ladies finger fry

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய்   - 2 கப் ( நறுக்கியது)
வெங்காயம் - 10 (நறுக்கியது)
வர மிளகாய் -5
பூண்டு-5
சீரகம் - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய்- சிறிது 
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிது

செய்முறை:
முதலில் மசாலா  தயாரித்து கொள்ளவும். ஒரு  மிக்சியில்  வர மிளகாய், பூண்டு,  சீரகம், துருவிய தேங்காய்  மற்றும் கறிவேப்பிலை  போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்  சிறிது எண்ணெய் ஊற்றி  கடுகு, உளுத்தம் பருப்பு  மற்றும் கறிவேப்பிலை  போட்டு தாளித்து  நறுக்கிய வெண்டைக்காய்  போட்டு நன்கு வதக்க வேண்டும்.  பின் நறுக்கிய  வெங்காயம் மற்றும் சிறிது மஞ்சள்  சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் அதில் அரைத்த மசாலாவை   போட்டு  நன்கு  பிரட்டி விட வேண்டும். கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், வெண்டைக்காய் மசால் பஃரை தயார் .....




Comments