வெண்டைக்காய் மசால் குழம்பு / கூட்டு/Ladies finger kootu/ Ladies finger Curry/ Ladies finger gravy/bhindi masala gravy/bhindi Curry
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 2 கப் (நறுக்கியது)
வெங்காயம் - 10 (நறுக்கியது)
பூண்டு- 10
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
தக்காளி -2 (நறுக்கியது)
துருவிய தேங்காய் -சிறிது
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
சாம்பார் தூள் -3 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெண்டைக்காய் நன்கு வதக்கி தனியாக எடுத்து கொள்ளவும்.
பிறகு மற்றோரு வாணலில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சீரகம் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின் வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி, துருவிய தேங்காய் மற்றும் சிறிது கொத்தமல்லி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கி மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
பிறகு மற்றோரு வாணலில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு கிளறவும். பிறகு வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். அதில் மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 10-15 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், வெண்டைக்காய் மசால் குழம்பு / கூட்டு ரெடி.....
Comments
Post a Comment