தேவையான பொருட்கள்:
குடைமிளகாய்
- 1 (பொடியாக
நறுக்கியது)
கடுகு
- 1 டீஸ்பூன்
உளுத்தம்
பருப்பு
- 2 டீஸ்பூன்
மல்லி
- 2 டீஸ்பூன்
வரமிளகாய்
- 4
சீரகம்
- 2 டீஸ்பூன்
வேர்க்கடலை
- 1 கையளவு
கறிவேப்பிலை
– சிறிது
கரம்
மசாலா
- 1 டீஸ்பூன்
எண்ணெய்
- 1 டேபிள்
ஸ்பூன் மற்றும் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் குடைமிளகாய் மற்றும் எண்ணெய் தவிர, அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுத்து இறக்கி, குளிர வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் கரம் மசாலாவை சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், குடைமிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். குடைமிளகாயானது நன்கு வெந்ததும், அத்துடன் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பிறகு சாதத்துடன் உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும் .
Comments
Post a Comment