காளான் வறுவல்/Kalan Varuval/Mushroom fry/ Mushroom curry

தேவையான பொருட்கள்:
காளான் - 1 பாக்கெட் (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
வரமிளகாய் - 2
சோம்பு  - 1/2 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை -1
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
 கறிவேப்பிலை,  கொத்தமல்லி - சிறிது
செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரிஞ்சி இலை, சோம்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் மல்லித்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள்  மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கி, காளானை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.  சிறிது உப்பு மற்றும் தண்ணீர்  சேர்த்து
மூடி  போட்டு  வைத்து நன்கு வேகவைக்க வேண்டும். வெந்த பின், அதில் கொத்தமல்லி தூவி இறக்கினால் காளான் வறுவல் தயார் ....



Comments