வேர்க்கடலை சட்னி/Kadalai Chutney/ Peanut Chutney/ Groundnut Chutney/ Palli Chutney


தேவையான பொருட்கள் :

காய்ந்த வேர்க்கடலை - 250 கிராம்
வர மிளகாய் (காய்ந்த மிளகாய்) - 3 
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
பூண்டு -3
தாளிப்பதற்கு ....
நல்லெண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு-1/4 ஸ்பூன்
உழுந்தம்  பருப்பு
வர மிளகாய் (காய்ந்த மிளகாய்) - 1
கறிவேப்பிலை
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

காய்ந்த வேர்க்கடலையை ஒரு சூடான வாணலியில் இட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். வேர்க்கடலை வாசம் நன்றாக வரும் வரை வறுக்கவும். தீய்த்துவிட வேண்டாம். பிறகு வேர்க்கடலை ஆறவைக்கவும். ஆறிய வேர்கடலை, வர மிளகாய், புளி, பூண்டு, கறிவேப்பிலை,  தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர்  சேர்த்து பொடியாக அரைக்கவும். பின் தாளிப்பதற்கு  கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள  கடலையில்  போட்டு கிளறினால்  கெட்டியான வேர்கடலை சட்னி தயார்....



Comments