வெங்காயம் பக்கோடா/Onion pakoda



தேவையான பொருட்கள்:

கடலை  மாவு-1 கப்

அரிசி மாவு-1/4 கப்

வெங்காயம் -5 (நீள  வாக்கில்  நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2

பூண்டு -5 (நசுக்கியது)

துருவிய இஞ்சி - தேவையான அளவு

சோம்பு - 1 டீஸ் ஸ்பூன்

மஞ்சள் தூள் -1/4 டீஸ் ஸ்பூன்

மிளகாய் தூள் - 2 டீஸ் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

புதினா, கொத்தமல்லி   மற்றும் கறிவேப்பிலை – சிறிது

நல்லெண்ணை - 1/2 லிட்டர்


செய்முறை:

முதலில் நீள வாக்கில் நறுக்கிய வெங்காயத்துடன், கடலை  மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், பூண்டு (நசுக்கியது), துருவிய இஞ்சி, சோம்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, புதினா, கொத்தமல்லி,  கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு  தண்ணீர்  சேர்த்து நன்கு பிசையவும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காய கலவையை எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கவும்.




Comments