இட்லி பொடி/ Idly Powder


தேவையான பொருட்கள்:

 கடலை பருப்பு -100 கிராம்

உளுந்து - 100 கிராம்

மிளகாய் வற்றல் -தேவையான அளவு

கறிவேப்பிலை-50 கிராம்

பெருங்காயம் - தேவையான அளவு

உப்பு -தேவையான அளவு


செய்முறை:

முதலில் ஒரு கடாயில் கடலை பருப்பு மற்றும் உளுந்தை பொன்னிறமாக  வறுத்து எடுத்து  கொள்ளவும். பிறகு மிளகாய் வற்றல், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் போட்டு வறுக்கவும். வறுத்த அனைத்து பொருட்களையும் மிஸ்யில்  போட்டு  கொரகொரபாக  அரைக்கவும். இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.


Comments