தேவையான பொருட்கள்:
அரிசி-1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப் (அரை மணி நேரம் ஊற வைத்து வேகவைக்கவும் )
கேரட் - 1 (நறுக்கியது)
பீன்ஸ் - 5 (நறுக்கியது)
முட்டைக்கோஸ் - 1 இதல் (நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1/4 கப்
கத்தரிக்காய் - 2 (நறுக்கியது)
முருங்கக்காய் - 1 (நறுக்கியது)
உருளை கிழங்கு - 1
தக்காளி -3 (நறுக்கியது)
தண்ணீர் - 6 கப்
வெங்காயம் -10 (நறுக்கியது )
பச்சை மிளகாய் - 2
கடுகு உளுந்து -1 டீஸ் ஸ்பூன்
சோம்பு - சிறிதளவு
நெய் - 1 டீஸ் ஸ்பூன்
நல்லெண்ணை - 2 டீஸ் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ் ஸ்பூன்
சாம்பார் தூள் - 2 டீஸ் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சோம்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும். பின் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கவும். இத்துடன் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும். பின் வேகவைத்த பருப்பு மற்றும் கழுவிய அரிசியை போட்டு வதக்கி அத்துடன் தண்ணீர் சேர்க்கவும். பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் நெய் ஊற்றி குக்கரை முடி 5 விசில் வந்தவுடன் கேஸை ஆப் செய்யவும். பின் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
Comments
Post a Comment